யாழில் வீடு ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதோடு வீட்டு உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – தாவடி வன்னிய சிங்கம் வீதியில் இன்று அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத் தாக்குதலில் ஐந்து பேர் காயம் அடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுவதியை காதலித்த இளைஞன்
யுவதியை காதலித்த இளைஞன் உடும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டில் உள்ள யுவதியை காதலித்துள்ளார்.
பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்குமாறு கூறிய போது பெற்றோர் மறுத்திருந்த நிலையில் அவ் இளைஞன் தனது குழுவினருடன் வந்து வீட்டினை தாக்கி சேதப்படுத்தி பெட்ரோல் குண்டு தாக்குதலையும் மேற்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
The post யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.