வெலிகம நகரை சூழவுள்ள கடற்பரப்பில் கடல் அலைகளின் நிறம் இன்று பழுப்பு நிறமாக மாறியுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் நாரா நிறுவனத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி உபுல் லியனகே குறிப்பிடுகையில்,
இந்த நாட்களில் மழை பெய்து வருவதால் நீரோட்டங்கள் மாறிஇ பாசிகள் அதிகரித்துஇ கடலின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்க கூடும் என தெரிவித்தார்..
மேலும், நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு, இது போன்ற நிலை உள்ளதா என்பதை கண்டறிய ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், யாரும் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கூறினார்.