இலங்கையில் தேசிக்காய்க்கு ஏற்பட்ட நிலை…!samugammedia

இலங்கையில் தேசிக்காய் ஒன்றின் விலை நாளுக்கு நாள் உயர்வடைந்து வருகின்றது.

இந்நிலையில் தற்போது தேசிக்காய் ஒன்றின் விலை 30 ரூபா முதல் 58 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதுடன் குறிப்பாக மாத்தளை உள்ளிட்ட சில பகுதிகளில் தேசிக்காய் ஒன்றின் விலை 30 ரூபா முதல் 38 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை நுவரெலியா உள்ளிட்ட பெருந்தோட்ட பகுதிகளில் தேசிக்காய் ஒன்றின் விலை 58 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் தேசிக்காயின் விலை 1200 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply