திருமலையில் கஜேந்திரன் எம்.பி மீது தாக்குதல்…! பொலிஸார் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்..! சந்திரகுமார் கோரிக்கை…!samugammedia

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் பொலிஸார் முன்னிலையில் சில ரௌடிகளால் தாக்கப்படும் போது பொலிஸார் நடந்துகொண்ட விதம் மிகவும் கண்டனத்திற்குரியது என முன்னாள் நாடாளுமன்ற சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை பொலிஸாரின் நடவடிக்கைகள் தமிழர், சிங்களவர் என்ற மனநிலையிலேயே காணப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செல்வராசா கஜேந்திரன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், அவர் இந்த நாட்டின் ஒர் உயர்ந்த சபையின் உறுப்பினர் அவரை தெருவில் ஒன்று கூடிய சில ரௌடிகள் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொலிஸாரின் முன்னிலையில் தாக்குவது என்பது மிகவும் காட்டுமிராண்டித்தனமான செயல்.

இதுதான் இந்த நாட்டின் நிலைமை, தமிழ் மக்கள் இரண்டாம் தர பிரஜைகளாக நடாத்தப்படுகிறார்கள் என்பதற்கு கஜேந்திரன் மீதான தாக்குதல் சம்பவம் என்பது ஒரு நல்ல உதாரணம் எனத் தெரிவித்த அவர் நினைவேந்தலுக்கான உரிமை வழங்கப்பட்டிருந்த நிலையில் அதனை மேற்கொள்ளவிடாது வன்முறையில் ஈடுப்பட்டவர்கள் மீது  கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அது மட்டுமன்றி மக்கள் பிரதிநிதி ஒருவரை வீதியில் விரட்டி விரட்டி தாக்குபவர்கள் மீதும் அந்த தாக்குதல் சம்பவத்தை கட்டுப்படுத்தாது நின்ற பொலிஸார்  மீதும் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *