குச்சவெளியில் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் நிலையமானது புதிதாக நிர்மானிக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தொகுதியில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர் எம்.ஜீ.குணதிலக, பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பொலிஸ் நிலையத்தினை திறந்துவைத்தார்.

அத்துடன் இந்நிகழ்வில் சிரேஸ்ட காவல்துறை கண்காணிப்பாளர் சமன் சிகேரா, முப்படை தளபதிகள், அரச அதிகாரிகள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

1958ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த பொலிஸ் நிலையமானது இதற்கு முன்னர் தொல்பொருள் திணைக்களத்திற்கு உரித்தான இடத்தில் நிறுவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply