முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பதவியிலிருந்து விரட்டியதன் விளைவையே மக்கள் தற்போது அனுபவிக்கின்றனர் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதற்காகத்தான் கோட்டாபயவை நாம் ஆட்சிக்கு கொண்டு வந்தோம். எனினும், அவரால் ஆட்சியை நிர்வகிக்க முடியாமல் போய்விட்டது.
இவ் விடயத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல்களை ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதும், வெளிப்படுத்துவோம். இவை தொடர்பான தகவல்கள் அரச இரகசிய தகவல் பெட்டியில் உள்ளது .
மஹிந்த ராஜபக்சவை எப்படி விரட்டினார்கள், அதன் பின்னணியில் செயற்பட்டது யார்? ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் அது பற்றி நாம் கதைப்போம். மஹிந்த ராஜபக்சவை விரட்டியதன் விளைவையே தற்போது மக்கள் அனுபவிக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.