தியாக தீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவேந்தலை தடை செய்யக்கோரி யாழ்ப்பணம் பொலிஸார் தாக்கல் செய்த மனுவை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று (20) யாழ் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன்போதே இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது.
குறித்த வழக்கில் சட்டத்தரணி கே. சுகாஸ் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.