தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்தர் பலி..! samugammedia

மன்னார்- நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கட்டைக்காடு காட்டுப் புதுக் குடியிருப்புப் பகுதியில் டிப்பர் வாகனம் மோதி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 விபத்தில் உயிரிழந்தவர் நானாட்டான் பிரதேசத்தில் இராசமடு – சாளம்பன் பகுதியில் வசிக்கும் 55 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான நடராசா ஞானசேகரம் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *