திருகோணமலை- கன்னியா வெந்நீர் ஊற்று காட்டுப்பகுதியில் இன்று (22) காலை மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது இன்று (22) காலை கன்னியா சுடுதண்ணீர் கிணற்றுக்கு செல்லும் வீதிக்கு அண்மையில் உள்ள காட்டுப் பகுதியில் குறித்த குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அத்துடன் சம்பூர் நவரெட்ணபுரம் காட்டுப் பகுதியில் ரி56 ரக துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.