தும்புத் தொழிற்சாலை எனும் பெயரில் இயங்கிவந்த சட்டவிரோத மணல் விற்பனை, மண் கல்லரிவு உற்பத்தி விற்பனை நிலையம் பருத்தித்துறை பொலீசாரால் இன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
தென்னந்தும்பு உற்பத்தி தொழிற்சாலை என்ற பெயரில் அனுமதி பெறப்பட்டு அங்கு பாரியளவில் மணல் அகழப்பட்டு அவை விற்பனை செய்யப்பட்டு வந்ததுடன் மணல் மண் கல் அரிவு செய்யப்பட்டு அதுவும் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.
இது தொடர்பில் பருத்தித்துறை பொலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று பிற்பகல் 7:30 மணியளவில் பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை பொலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையிலான 15 க்கு மேற்பட்ட பொலீஸார் குறித்த நிலையத்தை சுற்றிவளைத்து நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நான்கு மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஜே.சீ.பி என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபரும், நான்கு மோட்டார் சைக்கிள்களும், ஜே.சீ.பி வாகனமும் நாளைய தினம் பருத்தித்துறை நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக முன்வைக்கப்படவுள்ளது.
குறித்த தொழிற்சாலையில் இரு நூறு மீற்றருக்கு அதிக நீழமாகவும் சுமார் 15 அடி ஆழமும் 20 அடிக்கு மேல் அகலமும் கொண்ட பாரிய குழி ஜேசிபி இயந்திரத்தால் குழி தோண்டப்பட்டே சட்டவிரோத மணல் விநியோகம், மண் கல்லரிவு என்பன இடம் பெற்று வந்துள்ளமை குறிப்பிடதக்கது