யாழ்ப்பாணம் தீவகப் பகுதிகளில் உள்ள பனைமரம் உற்பட பயன் தரும் மரங்கள் தொடர்ச்சியாக எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டு வரும் நிலையில் பொறப்பு வாய்ந்த அதிகாரிகள் அசண்டயீனமாக செயல்படுவதாக தீவக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
யாழ்ப்பாணம் தீவகப் பகுதியான வேலணைப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மண்கும்பான் அல்லப்பிட்டி போன்ற பகுதிகளிலே இவ்வாறு பயன் தரும் மரங்கள் எரியூட்டப்பட்டு அழிக்கப்படுகின்றன.
குறித்த பகுதிகளில் காணப்படும் பிரதான பளமான பனை வளம் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருவதோடு வீதிகளில் நாட்டப்பட்ட நிழல் தரும் மரங்களும் இவ்வாறு அளிக்கப்படுகிறது.
அது மட்டும் அல்லாது வயல் நிலங்களில் காணப்படும் பற்கள் இரவு நேரங்களில் விசாமிகளால் தீயிடப்படுவதால் குறித்த பகுதி முழுவதும் தீப் பரம்பல் ஏற்படுகிறது.
மாலை நேரங்களில் இத் தகைய செயல்பாடுகள் தொடர்ச்சியாக இடம் பெற்று வரும் நிலையில் பிரதேசத்தில் சேவையில் ஈடுபடும் பொறப்பு வாய்ந்த அதிகாரிகள் தடுப்பதற்கு உரிய பொறிமுறையை ஏற்படுத்தவில்லை என குற்றச்சாட்டுகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை தெரிவித்த போதும் விசமிகள் எரியூட்டுகின்றனர் என கூறி அதிகாரிகள் தப்பித்துக் கொள்ளும் செயல்பாட்டை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது தீயணைப்பதற்கு கட்டுப்பணம் செலுத்த வேண்டும் என்பதற்காக அவ் வீதியால் வருகை தரும் அரச அதிகாரிகள் தீ ஏற்பட்டால் கூட அசந்தமாக செல்லும் நிலை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறார்.
இதுவரை சுமார் நான்கு தடவைகளுக்கு மேல் எரியூட்டப்பட்ட சம்பவங்கள் இடம் பெற்ற நிலையில் மக்களின் வரிப்பணம் மூலம் பெறப்பட்ட நிதியிலை தீயணைப்பு பிரிவுக்கு கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே தீவகாப் பகுதி குடிநீருக்காக மாற்று வழிகளில் நீரைப் பெறுகின்ற நிலையில் விவசாய காணிகளும் உவர் தன்மையாக மாறி வருகிறது.
இவ்வாறான நிலையில் பனை வளம் மற்றும் பயன் தரும் மரங்கள வகை தொகை இன்றி அளிக்கப்படும் ஆனால் தீவகத்தின் எஞ்சிய வயல் பிரதேசங்களும் முழுமையாக உவர் நிலமாகும்.
ஆகவே தீவகப் பகுதிகளிடம் இயற்கை வளங்களை அழிப்போருக்கு எதிராக பொறப்பு வாய்ந்த அதிகாரிகள் தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை முன்வைக்கின்றனர்.