உற்பத்தி செலவு மற்றும் பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்களை தீர்க்க பொறிமுறையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என குழு வலியுறுத்தியது.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கூடிய போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த குழுவின் தலைவர், உள்நாட்டு சந்தையில் கூட குறிப்பிட்ட சில பொருட்களுக்கான தேவை காணப்படுகின்ற போதிலும் விநியோகச் சங்கிலியில் தொடர்ச்சி இன்மை பாரிய சிக்கலாகும் எனத் தெரிவித்தார்.
தொடர்ச்சி இன்மையால் விலை அதிகரிப்பதாகவும் இதனால் கொள்வனவாளர்கள் இலக்கப்படுவதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.
உற்பத்திச் செலவு அதிகரிப்பது சிக்கலானது எனவும், இந்தச் சிக்கலை தீர்ப்பதற்கு பொறிமுறையொன்றை அமைப்பது தொடர்பில் கண்டறியுமாறு குழுவினால் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டப்பட்டது.