மாத்தறை பம்புரனை பிரதேசத்தில் கடை ஒன்றில் பெண் ஒருவர் கொள்வனவு செய்த பாணில் பீடித் துண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை இரண்டு பாண்களை குறித்த பெண் கொள்வனவு செய்து, பாண் துண்டு ஒன்றை வெட்டும் போதே அந்த பீடித்துண்டை அவதானித்துள்ளார்.
முதலில் கறிவேப்பிலை என நினைத்து நசுக்கிய போது அது பீடி என தெரியவந்தது. பின்னர் நன்றாக வெளியே எடுத்து பார்க்கும் போது பீடியின் பெரிய துண்டு ஒன்று கிடந்துள்ளது.
இதனால் கடும் அதிருப்தியடைந்த பெண் இனிமேல் பாண் சாப்பிடுவதையே நிறுத்திவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க வேண்டுகிறேன். குறிப்பாக உணவு உற்பத்தியில் பேக்கரி உரிமையாளர்கள் பொறுப்பாக செயற்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகருக்கு தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.