எதிர்வரும் 2024ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் முன்னர் தமது அணிக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்கவில்லை என்றால், வரவு-செலவுத் திட்டத்தை ஆதரிப்பதில்லை என பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகிறது.
அந்தவகையில், நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரது வீட்டில் அண்மையில் இது சம்பந்தமான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் தொடர்ந்தும் பசில் ராஜபக்ஷவுக்கு அறிவுறுத்துவதில் பலனில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதனால், இது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெளிவுப்படுத்தி பிரச்சினைக்கு தீர்வு காணசம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.