இலங்கையில் நள்ளிரவில் பயங்கரம்..! இளம் கணவரை கொடூரமாக அடித்துக் கொன்ற மனைவி..! samugammedia

நுவரெலியா, விஜிதபுர பிரதேசத்தில் பெண்ணொருவரின் தாக்குதலில் கணவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்றிரவு இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சந்தேகத்திற்கிடமான பெண் தனது கணவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நேற்று இரவு பொலிஸ் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் விஜிதபுர பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

வீட்டில் குடிபோதையில் இருந்த கணவர், மனைவி வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டுக்கு வந்த பிறகு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்த கணவர் தனது மனைவியைத் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் கணவனை மனைவி கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

சடலம் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணை நடத்தப்படவுள்ளது.

32 வயதுடைய பெண் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *