தேசிய கடன் உத்தரவாத முகவர் நிலையமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அறிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடன் மறுசீரமைப்பின் பின்னர் டிசம்பர் மாதமளவில் வர்த்தகர்களுக்கு தேவையான நிதி வசதிகள் வழங்கப்படும்.
இதற்கமைய, தேசிய கடன் உத்தரவாத முகவர் நிலையத்தின் ஊடாக சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு தேவையான நிதி வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.