காலி – டிக்சன் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன.
காலி நகரின் டிக்சன் வீதியிலுள்ள ஆளுநர் அலுவலகத்திற்கு அருகில் நேற்று இரவு 7.40 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
காலியில் உள்ள ஆடை வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது அவர் மீது இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
டி-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கார் மீது பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் காயமடைந்த வர்த்தகர் உடனடியாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
சம்பவத்தில் 61 வயதான லலித் வசந்த மெண்டிசே இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இடத்தில் இன்று (24) காலி மேலதிக நீதவான் லக்மினி விதானகமகே தலைமையில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சட்ட வைத்திய அதிகாரியும் அங்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.