
இந்தக் கட்டுரைக்கு அறிமுகமாக ஒரு விடயத்தை வாசகர்களுக்கு விளக்க விரும்புகிறேன். தீவிரவாதம், பயங்கரவாதம், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் ஆகிய சொற்களுக்கு சட்டவியல் அடிப்படையிலான ஒரு வரைவிலக்கணம் இன்றுவரை எந்த மொழியிலும் இல்லை. அவை அரசியல் தலைவர்கள் தமது அநியாயங்களையும், கொலைகளையும், அழிவுகளையும் மறைப்பதற்காகக் கையாளும் ஒரு சொற்போர்வை.