யாசகத்தில் ஈடுபட்டு போதைப்பொருள் வாங்கி பயன்படுத்திய இரு பிள்ளைகளின் தாய்! samugammedia

ஹொரணையில் உள்ள பிரதான வங்கிகளின் ஏ.டி.எம். இயந்திரங்களுக்கு முன்பாக குழந்தையுடன் யாசகத்தில் ஈடுபட்டு, அதனூடாக கிடைக்கும் பணத்தில் போதைப்பொருளை வாங்கி பயன்படுத்தியதாக கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண், பண பரிவர்த்தனைக்காக ஏ.டி.எம் இயந்திரங்களுக்கு வரும் நபர்களிடம் பணம் வசூலித்து போதைப்பொருள் கொள்வனவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைதானவர், பொல்கஸ்ஓவிட்ட – பஹலமாகம பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 25 வயதுடைய ஒருவராவார்.

குறித்த பெண் பத்து மாதங்களுக்கு முன்னர் பொல்கஸ்ஓவிட்ட பிரதேசத்தில் உள்ள அழகூட்டல் நிலையமொன்றில் பணி புரிந்துள்ளதாகவும், பணிபுரியும் காலத்தில் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Leave a Reply