மூதாட்டியிடம் பரிசு வழங்க வந்த இளைஞன்…! மாயமான தங்கச் சங்கிலி…!samugammedia

திருகோணமலை நகரில் துறைமுகப்பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட கிறீன்  வீதியில் இன்று(02) காலை சுமார் பதினொன்று மணியளவில் பரிசு கொடுக்க வந்துள்ளதாக கூறி வீட்டுக்குள் வந்த வாலிபர் ஒருவர் வீட்டில் இருந்த மூதாட்டியிடம் இருந்து ஐந்து பவுண் நிறையுடைய தங்க சங்கிலியை அபகரித்து சென்றுள்ளதாக துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இலக்கத்தகடு இல்லாத இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞரால் மேற்படி கொள்ளை இடம் பெற்றதாக துறைமுகப்பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளையில் ஈடுபட்ட இளைஞனை  துரத்திச்சென்ற ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் தேடுதலை முடுக்கிவிட்டுள்ளதாக துறைமுகப்பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply