ரூ. 300 – 400 கூட பாண் வாங்க முடியாமல்போகலாம்: பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்

கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இது குறித்து என்.கே.ஜயவர்த்தன கூறுகையில்,
நாட்டிலுள்ள பேக்கரிகளுக்குத் தேவையான மாவில் 75% மாத்திரமே பெறப்படுவதாகவும் அதனால் பேக்கரித் தொழில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக பேக்கரி உற்பத்திகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், பேக்கரி உரிமையாளர்கள் அவற்றின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளது.

இன்று ஒரு இறாத்தல் பாண் ரூ.100 விற்கப்பட்டாலும், எதிர்காலத்தில் அதனை முந்நூறு, நானூறு ரூபாவுக்குக் கூட வாங்க முடியாது. இதன் காரணமாக கோதுமை மாவுக்கான கட்டுப்பாட்டு விலையை விரைவில் அமுல்படுத்தி மாவின் விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தலையிடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply