துப்பாக்கியுடன் மாலைத்தீவு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (11) இரவு இலங்கையில் இருந்து மாலைத்தீவுக்கு செல்லவிருந்த விமானத்தில் இருந்து புறப்படுவதற்காக வந்துள்ளார்.
அவரது பொருட்களை ஸ்கேன் செய்து பார்த்ததில் ரிவோல்வரை போன்ற துப்பாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட மாலைத்தீவு பிரஜை 58 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.