பலாங்கொடையில் மண்சரிவில் சிக்கி காணாமல்போன நால்வரின் சடலங்களும் மீட்பு…!samugammedia

பலாங்கொடை கவரன்ஹேன வெயின்தென்ன பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்குண்டு காணாமல் போன நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பலாங்கொடை– கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த மண்சரிவு ஏற்பட்டது.

இந்த மண்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் புதையுண்டனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், புதையுண்டவர்களைத் தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்தநிலையில், இரண்டு தினங்களின் பின்னர் காணாமல் போன நால்வரின் சடலங்களும் இன்று மீட்கப்பட்டுள்ளது.

Leave a Reply