ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் முன்வைத்துள்ள வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் H.M.M.ஹரீஸ் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் காணப்பட்ட பொருளாதார நெருக்கடியை தீர்க்கவும் மக்களின் இன்னல்களை தீர்க்கவும் உருவாக்கப்பட்டதே இவ்வரவு செலவு திட்டமாகும்.
இக்காலகட்டத்தில் சம்பள உயர்வு என்பது முக்கியமான ஒன்றாகும். அதை இவ்வரவு செலவு திட்டம் உள்ளடக்கி இருக்கிறது. இவ்விடயம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்திய பொருளாதார கொள்கை வலுவுள்ளதாக இருக்க காரணம் முன்னைய பிரதமர் மன்மோகன்சிங் அதைப்போல இலங்கை பொருளாதாரத்தினை தூக்கிநிறுத்தக்கூடியவர் எமது ஜனாதிபதி அவர்கள்.
திறந்த பொருளாதார கொள்கை மூலமாகவே இந்தியா வளர்ந்தது. பொருளாதார புரட்சி ஏற்பட்டு வலுவான நிலைக்கு வரக்காரணம் அந்நாட்டின் பொருளாதார கொள்கையே ஆகும். அதைப்போலவே எங்கள் நாடும் வர வேண்டும் என நாங்கள் ஆசைப்படுகிறோம். இதன் மூலம் பொருளாதார மலர்ச்சி எற்படும் என நம்பிக்கை இருக்கிறது. கிழக்கு மாகாணம் மேலும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். தொழில் துறையை அபிவிருத்தி செய்வதனூடாக நாட்டின் அபிவிருத்தியை எட்ட முடியும். நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்ட வேண்டும். எனவே கிழக்கு மாகாணத்தில் குறைகளை நிவர்த்திசெய்ய வேண்டிக்கொள்கிறேன். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.