யாழ் நகரில் நூற்றாண்டு கால பழமையான மரமொன்று சீரற்ற காலநிலை காரணமாக இன்று (16.11) முறிந்து விழுந்தது.
யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் ஆரம்ப பாடசாலைக்கு முன்பாக வீதியோரமாக இருந்த மலைவேம்பு மரமே இவ்வாறு முறிந்து விழுந்துள்ளது.
பாடசாலை முன்னால் இருந்த குறித்த மரமானது வீதிக்கு குறுக்காக விழாது வெற்றுக் காணிக்குள் விழுந்ததால் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மைக்காலமாக நாடளாவிய ரீதியில் வீதியோரமாக உள்ள மரங்கள் முறிந்து விழுகின்ற நிலையில் குறித்த மரம் முறிந்தால் பாரிய அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடும் எனவே இந்த மரத்தை அகற்ற சம்பத்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.