உலகின் மிகப்பெரிய உல்லாச பயண கப்பல் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வருகை! samugammedia

உலகில் மிகப்பெரிய சுற்றுலா கப்பல் ஞாயிற்றுக்கிழமை (19/11/2023) அன்று இலங்கைக்கு வருகை தர உள்ளது. உல்லாசப் பயணிகளை கவரும் இந்த சுற்றுலா கப்பல், எதிர்வரும் 19ஆம் 20-ம் தேதிகளில் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டிருக்கும்.

இலங்கையில் உல்லாச பயண துறையை ஊக்குவிக்கின்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் இலங்கை வரும் இந்த கப்பலை, உல்லாச பயண துறையில் ஈடுபட்டு வரும் பிரபல நிறுவனமான YARA GLOBAL (pvt Ltd) நிறுவனத் தலைவர் H.M.Riyaldeen இந்தக் கப்பலுக்கு விஜயம் செய்வதோடு இலங்கை வரும் உல்லாச பயணிகளை இலங்கையின் சுற்றுலா தலங்களை பார்வையிடுவதற்கு ஏற்பாடு செய்யவும், இலங்கையில் உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான கலந்துரையாடலும் உல்லாச பயணிகளோடு மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரியவருகிறது.

Leave a Reply