யாழில் இலவச நீரிழிவு பரிசோதனை முகாம்…!samugammedia

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழில் இன்றையதினம் காலை இலவச நீரிழிவுப் பரிசோதனை முகாம் இடம்பெற்றது.

யாழ் நீரிழிவுக் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இலவச நீரிழிவுப் பரிசோதனை முகாம் இன்று காலை 09 மணியளவில் ஆரம்பமானது.

குறித்த பரிசோதனை முகாம் இன்று பிற்பகல்1மணிவரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை குறித்த முகாமில் கண்பரிசோதனை இரத்த அழுத்த பரிசோதனை போன்றனவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இலவச நீரிழிவுப் பரிசோதனை முகாமில் பெருமளவான மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.Leave a Reply