மஹா ஓயாவின் தாழ்நிலப்பகுதிகளில் வெள்ள அபாயம்! samugammedia

மஹா ஓயாவை அண்மித்த பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளமையினால், அதன் நீர் மட்டம் சில பகுதிகளில் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 24 மணிநேரத்தினுள், சிலாபம், திவுலப்பிட்டிய, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான, நாரம்மல மற்றும் தங்கொட்டுவ ஆகிய பகுதிகளிலுள்ள மஹா ஓயாவின் தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Reply