அரச பேருந்து மலையக பகுதிகளில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்த படுவதில்லை இதனால் பயனிகள் அவதி! samugammedia

இலங்கை போக்குவரத்து சபை ஹட்டன் டிப்போவுக்கு சொந்தமான பேருந்து டயகமவில் இருந்து கொழும்பு செல்லும் பேருந்து தலவாக்கலை அது போய் உடுகம வரை செல்லும் பேருந்து தரிப்பிடத்தில்  நிறுத்த படுவதில்லை   சுமார் 50 மீட்டருக்கு அப்பால் நிறுத்தப் படுகிறது . இதனால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பயனிகள் அவதி.  இது குறித்து தலவாக்கலை காவல் நிலையத்தில் உள்ள போக்குவரத்து காவல் துரை அதிகாரிகள் கவனம் செலுத்த   வில்லை. 

முறையாக நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தி பயனிகள் பாடசாலை மாணவர்கள் ஏற்றாமல், பிரிதொரு 50 மீட்டருக்கு அப்பால் உள்ள இடத்தில் நிறுத்தி  பயணிகளை ஏற்றினால் குற்றமாகும்.

ஆனால் இவர்கள் எங்கு எல்லாம் நிறுத்துவா்ர்கள் எமக்கு தெரியும், குறிப்பாக சாரதி நடத்துநர் ஆகிய இருவருக்கும் உணவு கிடைக்கும் இடங்களில் கண்டிப்பாக நிறுத்தி பயனிகள் பணத்தை அபகரிக்க உதவுவர்.

கடந்த காலங்களில் பணியாற்றிய சாரதி மணி சாரதி அவரது கடமையை முறையாக அனைவரும் அறிவர்.

அவர் அனைத்து பாடசாலை பிள்ளைகளையும் ஏற்றி செல்வார்.

எந்த ஒரு பாடசாலை மாணவ மாணவிகளையும் விட்டு செல்வது இல்லை. 

அதே பேருந்தில் பயணம் பல பாடசாலை மாணவர்கள் கூடுதலாக  தலவாக்கலை சென் பெற்றிக் கல்லூரி சென்கிலையர் பாடசாலை பிள்ளைகள்  செல்வது வழக்கம் 

இந்த பஸ் சாரதி நடத்துனர் பாடசாலை பிள்ளைகளை  ஏற்றிச் செல்வதில் விருப்பம் இல்லை  30 மேற்பட்ட    சீசன் வாங்கிய பாடசாலை பிள்ளைகளும் ஆசிரியர்களும் காத்திருக்கிறார்கள்.

பஸ் நடத்துனர் பாடசாலை பிள்ளைகளை தவறான வார்த்தையில் பேசுவதாகவும் சிலர்   கூறுகிறார்கள். 

தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நினைத்தால்  இதனை தடுக்க முடியும்.

அவ்வாறு அவர் நடவடிக்கை எடுக்கும் பட்ச்சத்தில் பாடசாலை மாணவர்களுக்கு உதவியா சட்டக இருக்கும்.

பேருந்து தரிப்பிடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும்.  அதை விடுத்து வேறு இடத்தில் நிறுத்தினால்  குற்றம்.

பேருந்து நிறுத்தும் பேருந்து சாரதிகள் மீது போக்குவரத்து பொலிசார் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு தனியார் ,அரச பேருந்து என்று வேறு பாடு இல்லை.  தலவாக்கலை , லிந்துல்ல  பிரதேச சபை இது குறித்து கவனத்திற்கு  உங்களின் கவன குறைவு  இதற்கு காரணம் என மக்கள் அதிர்ப்தி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Leave a Reply