வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு…!45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்…! samugammedia

2024 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு விவாத வாக்கெடுப்பில் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, குறித்த ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் கிடைத்தன.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் சுதந்திர கட்சியும், ஜி.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

இதேவேளை, குழுநிலை அல்லது மூன்றாம் வாசிப்பு விவாதம் நாளை முதல் டிசம்பர் 13 ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply