ரொஷான் பதவி நீக்கம்: சஜித் கடும் அதிருப்தி!samugammedia

விளையாட்டுத்துறை அமைச்சராகச் செயற்பட்ட ரொஷான் ரணசிங்க அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் “மக்கள் ஆணையின்றி ஆட்சிக்கு வந்த தற்போதைய ஜனாதிபதி, நாட்டின் சட்டத்தைக் கூட மீறி விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் பணிகளுக்கு இடையூறு விளைவித்து, ஊழல் நிறைந்த கிரிக்கெட் நிர்வாகத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அனைத்து பணிகளையும் முடக்கி,அவரை விளையாட்டுத்துறை அமைச்சுப் பதவியில் இருந்தும், ஏனைய அமைச்சுப் பதவிகளில் இருந்தும் நீக்க எடுத்த முட்டாள்தனமான முடிவை ஜனநாயகத்தை மதிக்கும் எதிர்க்கட்சி என்ற வகையில் எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *