
எமது நாட்டுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட ஏனைய நாடுகளின் நிதியங்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் சவூதி நிதியத்தால் எமக்கு கிடைத்துவந்த பணம் நிறுத்தப்படாமல் தொடர்ந்து கிடைத்து வருகிறது. அதற்காக நாங்கள் சவூதி அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிக்கிறோம் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.