ஜனாதிபதி தலைமையில் இன்று விசேட அமைச்சரவை கூட்டம்!!

நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம் இன்று கூடவுள்ளது.

நேற்று மாலை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்ட நிலையில் இந்த அமைச்சரவை கூட்டம் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல மற்றும் உயர் அதிகாரிகள் குழு இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுக்களின் அதிகாரிகளும் கலந்துகொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply