இரட்டிப்பான முன்பள்ளி ஆசிரியர்களின் மாதாந்த கொடுப்பனவு – வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

 

பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவான 2500 ரூபாவை 5000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் உள்ள சுமார் 34,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு எதிர்காலத்தில் இதே கொடுப்பனவு கிடைக்குமென விவசாய மற்றும் தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நேற்று (09) அகுனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியர் அமைப்பின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

அங்கு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த வாரம் இந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்ததாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

Leave a Reply