ஜனாதிபதிக்கு நான்கு முக்கிய போக்குவரத்து சங்கங்கள் ஆதரவு

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமது பூரண ஆதரவை வழங்குவதாக நான்கு பிரதான போக்குவரத்துச் சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதன்படி, அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம், தேசிய Taxi App முச்சக்கரவண்டி நிபுணத்துவ சங்கம், ஐக்கிய பயணிகள் போக்குவரத்து சேவை நிபுணர்கள் சங்கம், மேல் மாகாண முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டுறவு சங்கம் என்பன தற்போதைய ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுடனான இன்றைய (04) சந்திப்பின்போதே அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியை அடுத்து கடனில் தவிக்கும் சாரதிகளின் கடனை மீளச் செலுத்துவதை மறுசீரமைக்க அரச வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் சந்தர்ப்பம் வழங்குவதாக ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *