
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலைச்சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோ மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருபாலைச் சந்திக்கு மோட்டார் சைக்கிளில் வந்த மூவரடங்கிய வாள்வெட்டுக் குழு, சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த JI _1229 இலக்கமுடைய ஓட்டோ மீது தாக்குதலை மேற்கொண்டனர்.
இது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அளித்த முறைப்பாட்டுக்கமைய சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் ஓட்டோவை மீட்டதோடு மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.





