ஐக்கிய மக்கள் சக்தியினரால் தீப்பந்தப் போராட்டம் முன்னெடுப்பு!

பண்டாரவளை மாநகரில் ஐக்கிய மக்கள் சக்தியினரால் தீப்பந்தப் போராட்டம் நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்டது.

பண்டாரவளை மாநகர சபை மைதானத்திலிருந்து, போராட்டக்காரர்கள் பேரணியாக பண்டாரவளை மாநகர் வழியாக அதன் சுற்று வட்டாரத்தில் சுமார் 3 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது மின் துண்டிப்பு, எரிவாயு, எரிபொருள் தட்டுப்பாடுகள், அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடுகள் ஆகியவற்றைக் கண்டித்து தீப்பந்தப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

போராட்டத்தில் பெருமளவானோர் ஈடுபட்டிருந்தமையால் போக்குவரத்துகள் 3 மணி நேரம்தடைப்பட்டு, வாகன நெரிசல்கள் ஏற்பட்டது .

Leave a Reply