
இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான முன்மொழிவு பட்டியலை தேசிய கல்வி நிறுவனத்திடம் கையளித்துள்ளது.
நாட்டின் கல்வி முறையை பாரிய மாற்றத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஒன்றியத்தின் பிரதம செயலாளரான மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தாங்கள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமான கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டோம்.
கல்விச் சீர்திருத்தங்களை அமுல்படுத்தும் போது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சாத்தியமான பிரச்சினைகள், செயல்முறையின் நடைமுறைத்தன்மை உள்ளிட்டவை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
கல்விச் சீர்திருத்தங்களை ஒன்றியம் எதிர்க்கவில்லை என்றும், அத்தகைய அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவளிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





