மலையக மக்களை நசுக்குவதற்கு தனிச்சட்டம்! – வடிவேல் சுரேஷ் எம்.பி சபையில் விளாசல்

இன்றைய சபை அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கருத்து தெரிவிக்கையில்,

2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி, சம்பள நிர்ணய சபையின் அனுமதியுடன், தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் 1,000 ரூபா என நிர்ணயிக்கப்பட்டது.

இன்றுவரை அவை நடைமுறைக்கு வரவில்லை. மூன்று மடங்கு வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது.

ஆனால், இன்று வரை மலையக மக்கள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். மாறாக அமைச்சர் மற்றும் ஆணையாளருக்கு எதிராக தோட்டக் கம்பெனிகள் வழக்குத் தொடர்ந்துள்ளன.

அரசுக்கு எதிராக, மக்களுக்கு செயற்படும் துணிவு கம்பெனிகளுக்கு யார் கொடுத்தது. யார் இவர்களின் பின்னால் நிற்கின்றனர். கொமிஷன் வாங்குகின்றனரா. நீதி அமைச்சரே ஒரே நாடு ஒரே சட்டம் என்று கூறுகிறீர்கள்.

ஆனால் மலையகத்துக்கு மட்டும் தனிச் சட்டம். தொடர்ந்தும் மலையக மக்களை நசுக்கிறீர்கள். உலக நாட்டில் எந்தவொரு இடத்திலும் இப்படி ஒரு நிலைமை இல்லை. -என்றார்.

Leave a Reply