மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் – ஆசாத் நகர் பகுதியில் நோயாளர் காவு வண்டியும் முச்சச வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் நோயாளர் காவு வண்டியில் பயணித்த கர்ப்பிணி தாயொருவரும் முச்சக்கரவண்டி சாரதியும் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் இருந்து மூதூர் தள வைத்தியசாலைக்கு கர்ப்பிணி தாய் ஒருவரை ஏற்றிச்சென்ற நோயாளர் காவு வண்டி முச்சக்கர வண்டியுடன் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த இருவரும் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.







