
யாழ்ப்பாணம், மார்ச் 10
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச மட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை விரைவாக கூட்டுமாறு பிரதமரின் பிரதிநிதி கீதநாத் காசிலிங்கம் அரசாங்க அதிபருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக காசிலிங்கம் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினை அவசரமாக கூட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளதுடன் ஏனைய பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களையும் விரைந்து செயல்படுத்துமாறும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மகேசனுக்கு அறிவித்துள்ளார்.





