எங்கள் மீது குண்டு மழை பொலிந்தவர்களை நாம் மறக்க மாட்டோம்! சிறீதரன் எம்.பி காட்டம்

ஆசியாவின் ஆச்சரியம் என்னவென்றால் உலக நாடுகளிடம் கடனை வாங்கி, மக்களை வரிசையில் விடுவது தானா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சபையில் இன்று தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.

நாட்டின் இனப் பிரச்சினை,பொருளாதார பிரச்சினை தீர்க்க முடியவில்லை என்றால் அரசு பதவி விலகி ,செய்யக் கூடியவர்களிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும்.

அதை விடுத்து மக்களை துன்புறுத்தக் கூடாது.இந்தியாவின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் அப்படியே கைவிடப்பட்டுள்ளது.

எப்போது இனி விமான சேவைகள் ஆரம்பமாகும்.வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் பொருளாதார ரீதியாக முன்னேறி விடுவார்கள் என்று எண்ணி இந்த விமான நிலையத்தை கிடப்பில் போட்டுள்ளீகள்.இது தான் உண்மை.மக்களை வாழ விடுங்கள்,

இது தவிர கிளிநொச்சி கிராஞ்சி ,பள்ளிக்குடா பிரதேச மீனவர்கள் அச்சத்துடன் தமது தொழிலை மேற்கொள்கின்றனர்.

கடந்த 3ஆம் திகதி கடற் படையால் தாக்கப்பட்ட மீனவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மீனவர்கள் தவறு செய்தால் கைது செய்து ஒப்படையுங்கள்.அத்துடன் இப்போது அங்கே பாஸ் காண்பித்த பின்னரே கடல் தொழிலுக்கு செல்லும் நிலை காணப்படுகிறது.

எங்கள் மீது குண்டு மழை பொலிந்தவர்களை நாம் மறக்க மாட்டோம்.

உக்கிரைன் விமானிகள் இங்கே வந்து எங்கள் மீது வந்து குண்டு வீசினார்கள்.இப்போது காலம் மாறியுள்ளது என்றார்.

Leave a Reply