
கொழும்பு, மார்ச் 11
நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு அவசியமான நிலக்கரி உரியவாறு நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதென வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையம் ஊடாக தேசிய மின்சார கட்டமைப்புக்கு 900 மெகாவாட் மின்சாரம் கிடைக்கின்றது.
இந்தநிலையில், வரும் ஏப்ரல் மாதம் நிறைவடையும் வரையில் அனல்மின் நிலையத்திற்கு அவசியமான நிலக்கரி, மேலும் 5 கப்பல்களின் மூலம் கொண்டுவரப்பட உள்ளதாக அமைச்சர் வியாழக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.





