இ.போ.ச. பஸ் மோதி தம்பதி படுகாயம்!

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுண்டிக்குளம் சந்தியில் நடந்த விபத்தில் கணவனும், மனைவியும் படுகாயமடைந்தனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியை, புதுகுடியிருப்பில் இருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த இ.போ.ச. பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.படுகாயமடைந்தவர்கள் தருமபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.விபத்தில் தொடர்புடைய பஸ் சாரதியும், நடத்துநரும் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

Leave a Reply