546 கடல் மைல் தொலைவில் சுகவீனமடைந்த மீனவர் – விரைந்து செயற்பட்ட கடற்படை

இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பலநாள் மீன்பிடிப் படகில் திடீர் சுகவீனமடைந்த மீனவர் ஒருவர், இலங்கை கடற்படையினரின் துரித நடவடிக்கையால் பாதுகாப்பாகக் கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

குறித்த மீனவர் இன்று (16) காலை மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐந்து மீனவர்களுடன் நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஒக்டோபர் 3ஆம் திகதி கடலுக்குச் சென்ற ‘Mary 02’ என்ற பலநாள் மீன்பிடிப் படகு, ஹம்பாந்தோட்டையிலிருந்து சுமார் 546 கடல் மைல் தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, திடீர் சுகவீனமடைந்த மீனவர் முதலில் ‘BW Helios’ என்ற வர்த்தகக் கப்பலில் பாதுகாப்பாக ஏற்றப்பட்டுள்ளார்.

பின்னர், கடற்படையின் P 411 அதிவேகப் படகு மூலம் குறித்த மீனவர் கரைக்கு அழைத்து வரப்பட்டு, ஆரம்பகட்ட முதலுதவி வழங்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply