கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் இடம்பெற்ற கூட்டு பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தைக் கண்டித்தும், கிராமத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும் இன்று (16) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
சாந்தபுரம் கிராம பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் நடைபெற்றது.
கடந்த 16ஆம் திகதி சாந்தபுரம் கிராமத்தில் இடம்பெற்ற கூட்டு பாலியல் வன்கொடுமைச் சம்பவத்திற்குப் போதைப்பொருள் பாவனையே காரணம் எனப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
இதன்போது தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரனிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர்




