திருகோணமலை மாவட்டத்தில் இந்த வருடத்தில் 25 யானைகளும் 15 மனித உயிர்களும் பலியாகி உள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஹேமந்த குமார தெரிவித்தார்.
காட்டு யானைகளைப் பாதுகாத்தல் மற்றும் மனித-யானை மோதலால் ஏற்படும் சேதங்களைக் குறைத்தல் ஆகிய நோக்கங்களுடன் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் ‘தேசிய யானைகள் நடவடிக்கை’ தொடர்பான திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (20) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இதனை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் இவ்விடயத்தை குறிப்பிட்டார்.
மேலும் மாவட்டத்தில் ஸ அதிகளவான உயிரிழப்புகள் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவிலேயே இடம்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்
இக்கலந்துரையாடலின் போது
22வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் பி.ஆர்.எம்.பி.என்.பி. பம்பரதெனிய, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி பியால் ரவீந்திர, பிரதேச செயலாளர்கள், பாதுகாப்புப் படை மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்
கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மாவட்டச் செயலாளர் ஹேமந்த குமார, இந்த ஆண்டு இதுவரை மனித-யானை மோதலால் திருகோணமலை மாவட்டத்தில் 25 யானைகளும் 15 மனித உயிர்களும் பலியாகியுள்ளதாகத் தெரிவித்தார். இதில் அதிகளவான உயிரிழப்புகள் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவிலேயே பதிவாகியுள்ளன
மாவட்டத்தில் மனித-யானை மோதல்களைக் கட்டுப்படுத்துவதற்கு, இந்த ஒருங்கிணைப்புக் குழுவின் ஊடாக தேசிய யானைகள் நடவடிக்கைக்கு இராணுவத்தினர் வழங்கும் ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் மிகவும் முக்கியமானதும் காலத்தின் தேவையாகவும் உள்ளதாக அவர் மேலும் வலியுறுத்தினார்.




