
நாம் நடாத்திய போராட்டத்தின் மூலம் மக்களின் பலம்,இந்த அரசுக்கு நன்றாக விளங்கி இருக்கும் என நாடளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடாக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இலங்கையில் வாழும் மலையக தமிழ் மக்கள் தொடர்பாக அபிலாசைகள் ஆவணத்தை தமிழ் போக்கு கூட்டனி தயாரித்து தேசிய சர்வதேசிய நிறுவனங்களிற்கு வழங்குகிறது.
அதன் அடிப்படையில் நேற்று நாம் அபிலாசை ஆவணத்தை இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதுவர் விஷிகோஷி அவர்களிற்கு அவ் ஆவணத்தை வழங்கி ஜப்பானியர்களிற்கும் அந் நாட்டினருக்கும் இலங்கை வாழ் மலையக தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து அவ் ஆவணத்தின் மூலம் தெரியப்படுத்தியுள்ளோம்.
அந்த அடிப்படையில் தூதுவர் நம்மை சிறப்பாக வரவேற்று இலங்கையில் வாழ்கின்ற மக்களை பற்றி நாம் நன்கு அறிவோம் ஆனால் மலையக மக்கள் பற்றிய அறிவு குறைவாக காணப்பட்டுள்ளது இனி மலையக மக்கள் குறித்து கூடிய கவனம் செலுத்துவோம் என்று கூறினார்.
அதே போல இலங்கை அரசாங்கத்துடன் உள்ள நற்புரவோடு மலையக மக்களிற்கு உதவிகளை வழங்குவோம் என்று உறுதியளித்தார். உண்மையில் வரலாற்று ரீதியாக ஜப்பான் பாரிய உதவிகளை நமக்கு வழங்கியுள்ளது,சீனா நேற்றுதான் வந்தது ஜப்பான் அன்றிலிருந்து நம்முடன் கைகோர்த்துள்ளது என்று கூறியதும் அவர் மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.
மற்றும் இந் நிகழ்வில் திரு திகம்பரம் அவர்களும், ராதாகிருஷ்ணன் அவர்களும் இனைந்து கொண்டனர்.
ஜனாதிபதி அவர்கள் மக்களை நோக்கி உரையை நிகழ்த்தினார், ஆனால் எதிர் பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை அரசாங்கம் நாட்டை வீழ்த்தி விட்டது அப் பிரச்சனையில் இருந்து விடுபட எந்த உபாயங்களை கூறவில்லை
எமது நாட்டிற்கு பொருளாதார நிதியுதவி பெறுவதற்காக சர்வதேச நாணய நிதியம் செல்லவதா இல்லையா என அரசாங்கத்தினுள் முரண்படுகின்றனர் நிதி அமைச்சர் ஒன்று கூறுகிறார் ஜனாதிபதி ஒன்று நினைக்கின்றார் எல்லாதிற்கும் மேலாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் கப்ரால் அவர்கள் வேறு ஒரு கருத்தை முன் வைக்கின்றார் ஆனால் கடைசியில் நாணய நிதியத்திற்கு செல்லவில்லை.
ஆனால் நிதி அமைச்சர் இந்தியாவிற்கு சென்று 100 கோடி அமெரிக்கா டொலர் வழங்கும் போது புத்தாண்டை கொண்டாட இந்தியாவிடம் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது . ஆனால் இந்தியா வம்சாவளி மக்களிற்கு எந்த ஒரு நன்மை கிடைக்கவில்லை.
அதே போல அரசாங்கத்தில் விரட்டப்பட்ட விமல் வீரவன்ச, உதயம் கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார அவர்கள் கதைவிடுகின்றனர் என்ன பெசில் ராஜபக்ஷ அவர்கள்தான் குற்றவாளி என்றும் மற்றய ராஜபக்ஷ குடும்பத்தினர் மூலம் அடுத்த அவர்கள் ஆட்டத்தை நடாத்த உள்ளனர்.
எங்களுக்கு எந்த ராஜபக்ஷ வேண்டாம் அதற்காகத்தான் நேற்று சமகி ஜன பல வேகய கட்சி தலைமையில் வீதி போராட்டத்தை நடாத்தினோம் இது முடிவல்ல இது ஆரம்பம்.
எனவே மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர் மக்களின் கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லாவிட்டாலும் எங்களுடைய ஒரே பதில் GOTA GO HOME
இன்று மக்கள் அனைத்து பொருட்களிற்கும் வரிசையில் நிற்கின்றனர் வரிசையோ வரிசை மற்றும் களனி விகாரையில் பாதாளத்தில் நாகராஜா வந்து உங்களுக்கு ஒரு சிறந்த மன்னன் வரப்போகிறான் என்றும் கூறியதை நம்பி வரிசையில் நின்று வாக்களித்தனர் குறிப்பாக அன்று 69 லட்ச மக்கள் வரிசையில் நின்று வாக்களித்திற்குதான் இன்றும் மக்கள் வரிசையில் நிற்கின்றனர் என்றார்.





