இலங்கை மக்கள் இனி ஆடைகளும் அணிய முடியாது!

நாட்டில் தற்போது டொலர் நெருக்கடி நிலைமையால் எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டு காலத்தில் ஆடைகளின் விலை 50 வீதத்தால் அதிகரிக்கும் நிலையே காணப்படுவதாக இலங்கை சிறு கைத்தொழிலார்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள காரணத்தினால் தற்போது சந்தையில் புடவைகளின் விலைகள் 35 வீதத்தால் அதிகரித்துள்ளது.

இதனால் ஆடை உற்பத்தித்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தைத்து முடிக்கப்படட ஆடைகளின் விலைகளை அதிகரிக்க வேண்டியேற்பட்டுள்ளது.

நாட்டில் தின சரி அமுல்படுத்தப்படும் மின் வெட்டு காரணமாகவும் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் போது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்த நிலைமை தொடர்ந்தால் புத்தாண்டு காலத்தில் ஆடை விலைகளை 50 வீதத்தால் அதிகரிக்க நேரிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply