
நாட்டில் நாளைய தினமும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்படி, A முதல் L வரையான 12 வலயங்களில் காலை 8 மணியில் இருந்து மாலை 6 மணி வரையிலான காலப்பகுதியில் மூன்று மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், P முதல் W வரையான 8 வலயங்களில் காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரையிலான காலப்பகுதியில் இரண்டு மணிநேர மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும், குறித்தப் பகுதிகளில் பிற்பகல் 05 மணி முதல் 10 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் அறிவித்துள்ளது.





